ஐ.நாவின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி நந்தி காலமானார்
25 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நாவின் அமைப்புகளுடன் பணியாற்றியுள்ள சுபினே நந்தி, 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை இலங்கையில் பணியாற்றியுள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் நல்லிணக்கத்தை நோக்கிய நீடித்த அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை வளர்ப்பதில் ஐ.நாவின் முயற்சிகளுக்கு தலைமை தாங்கியதுடன், ஐ.நா. சபையில் இலங்கைக்கான சட்ட ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.
அவர் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட முன்னர் சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கான ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் பிராந்திய பணிப்பாளராகப் பணியாற்றினார்.
மேலும் ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளுக்கான ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் பிராந்திய பணியகத்தில் பிராந்திய திட்டம் மற்றும் கொள்கை பிரிவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்தோடு துர்க்மெனிஸ்தானுக்கான துணை வதிவிடப் பிரதிநிதியாகவும், பங்களாதேஷ் நாட்டுக்கான உதவி வதிவிடப் பிரதிநிதியாகவும் பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை