5-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி
ஐ பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லியை வீழ்த்திய மும்பை அணி, 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. டாஸ் வென்று களமிறங்கிய டெல்லி, அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் சரிந்ததால் தொடக்கத்திலேயே திணறியது.
பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் அரைசதம் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களை சேர்த்தது.
இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். அதிகபட்சமாக, கேப்டன் ரோகித் சர்மா 68 ரன்களையும், இஷான் கிஷான் 33 ரன்களையும் சேர்க்க, மும்பை அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டியது.
இதன் மூலம் சென்னை அணிக்கு அடுத்தபடியாக, தொடர்ந்து இருமுறை கோப்பையை கைப்பற்றிய அணி என்ற பெருமையை மும்பை அணி பெற்றுள்ளது.
கருத்துக்களேதுமில்லை