மலேசியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த 141 பேர் கைது…
மலேசியாவின் Hentian Kajang பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 6 குழந்தைகள் உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த 141 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களில் 65 பேர் இந்தோனேசியர்கள், 59 மியான்மரிகள், 9 பேர் நேபாளிகள் மற்றும் இன்னும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் 8 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாவதியாகி தங்கியிருத்தல், பார்வையாளர் விசா தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றங்களின் கீழ் இவர்கள் கைதாகியுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் Semenyig குடிவரவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை