கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபி

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலரும் இந்த கிறிஸ்துமஸ் பார்ட்டியின் போது ஸ்பெஷலாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கலாம். அந்த வகையில்  ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபி.எப்படி செய்வது என்று பார்கலாம்

இதற்கு அடுப்பில் எல்லாம் வேலை அதிகமாக இருக்காது. ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம்.

தேவையான பொருட்கள்: * உலர்ந்த துருவிய தேங்காய் (Dessicated Coconut) – 1 கப் * பால் பவுடர் – 1/4 கப் * அரிசி கிறிஸ்பீஸ் (Rice Krispies) – 1/2 கப் * சர்க்கரை பவுடர் – 1/2 கப் * விருப்பமான உலர் பழங்கள் மற்றும் டூட்டி ஃபுரூட்டி – 1/4 கப் * வெண்ணெய் – 1/4 கப் * தேங்காய் எண்ணெய் – 1/8 கப்

செய்முறை: * ஒரு பௌலில் உலர்ந்த துருவிய தேங்காய், பால் பவுடர் மற்றும் அரிசி கிறிஸ்பீஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். * பின்பு அதில் சர்க்கரை பவுடர், உலர்ந்த பழங்களில் பாதியைப் போட்டு மீதியை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

*பிறகு ஒரு கரண்டியால் கலவையை நன்கு கிளறி விடுங்கள். * அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருகியதும், தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

இப்போது இந்த வெண்ணெயை பௌலில் உள்ள கலவையில் ஊற்றி, நன்கு கரண்டியால் கிளறி விட வேண்டும். ஒருவேளை கலவையானது ஒன்றுசேராமல் உதிரியாகவே இருந்தால், மேலும் சிறிது தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ளலாம்.

 

அதன் பின் அதை ஒரு ட்ரேயில் போட்டு பரப்பி, தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். பின் மேலே எஞ்சிய உலர்ந்த பழங்களை பரப்பி, மீண்டும் தட்ட வேண்டும். * பின் அந்த ட்ரேயை ஒரு க்ளிங் வ்ராப்பர் (Cling Wrap) கொண்டு மூடி, ஃப்ரிட்ஜில் குறைந்தது 30 நிமிடம் வைத்து எடுத்து, பின் சதுர துண்டுகளாக கத்தி பயன்படுத்தி வெட்டினால், சுவையான ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபி தயார்…

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.