மாரடைப்பு வந்து தப்பித்தவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!
தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால் இதய நோய் ஒருவருக்கு எளிதில் வந்துவிடுகிறது. அதில் மாரடைப்பு தான் பலருக்கு ஏற்படுகிறது. மாரடைப்பு வந்து, அதிலிருந்து உயிர் தப்பிய ஒருவர் அவர்கள் உண்ணும் உணவில் செய்யக்கூடிய மாற்றமானது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மாரடைப்பிற்குப் பிறகு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மேற்கொள்ளும் வாழ்க்கை முறை மாற்றங்களால் பெரும்பாலான மக்கள் வலுவான மற்றும் துடிப்பான வாழ்க்கையை வாழ முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கீழ் காணும் உணவுகளை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் .
வறுத்த உணவுகள்
இதய ஆரோக்கிய உணவு என்பது உடலை நல்ல நிலையில் வைத்திருக்கவும், எதிர்காலத்தில் மாரடைப்பைத் தடுக்கவும் உதவும்.பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், சர்க்கரை மற்றும் சோடியத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் ஒருவருக்கு மாரடைப்பு ஒருமுறை வந்துவிட்டால், அவர் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் வழிகாட்டுதல்களின் உதவியுடன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதற்கு முன் மாரடைப்பு வந்த ஒருவர் முதலில் ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
ஹாட் டாக்ஸ், சாசேஜ் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
ஹாட் டாக்ஸ், சாசேஜ் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான ஹாட் டாக், சாசேஜ் மற்றும் பிற இறைச்சி போன்றவற்றில் சோடியம் மற்றும் நைட்ரேட்டுகள் உள்ளன. இது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன், மாரடைப்பிற்கான அபாயத்தையும் அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் என்பது ஆபத்தானது. ஏனெனில் பொதுவாக இதற்கு எந்த அறிகுறிகளும் இல்லை. உங்கள் இரத்த அழுத்தத்தை சரிபார்க்காவிட்டால், அது இயல்பை விட அதிகரிமாக இருக்கிறது என்பது தெரியாமல் போகும். எனவே இந்த வகை உணவுகளை மாரடைப்பிற்கு பின் அறவே தவிர்ப்பதே நல்லது.
சர்க்கரை நிறைந்த பேக்கிங் உணவுகள்
சர்க்கரை நிறைந்த பேக்கிங் உணவுகள் இதய ஆரோக்கியமான உணவுகள் என்று வரும் போது, அதில் சர்க்கரை உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் இருக்கும். இவை இரத்த கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கும். மேலும் சுத்திகரிக்கப்பட்ட ஸ்வீட்டுகளில் சோடியம் நிறைந்திருக்கும். எனவே உங்களுக்கு ஸ்வீட் சாப்பிட ஆசை எழுந்தால், நற்பதமான பழங்களை சாப்பிடுங்கள்.
உப்பு நிறைந்த நட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ்
உப்பு நிறைந்த நட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சோடியம் நிறைந்த உணவுகளைத் தவிர்த்தாக வேண்டும். சோடியமானது இரத்த அழுத்த அளவை எகிற வைத்து, இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே ஸ்நாக்ஸ் சமயத்தில் உப்பு நிறைந்த நட்ஸ் மற்றும் பிற சோடியம் நிறைந்த ஸ்நாக்ஸ்களைத் தவிர்த்திடுங்கள்.
சாஸ் மற்றும் க்ரீம்கள்
சாஸ் மற்றும் க்ரீம்கள் இனிப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவற்றில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு, இரத்த கொலஸ்ட்ராலின் அளவை மோசமாக அதிகரிக்கும். ஆகவே மாரடைப்பு வந்த ஒருவர், இந்த மாதிரியான உணவுகளைத் தவிர்ப்பதே நல்லது.
மாட்டிறைச்சி
மாட்டிறைச்சி ஊட்டச்சத்து நிபுணர்கள் பலரும் மாட்டிறைச்சியை இதய ஆரோக்கியமான உணவாக கருதுவதில்லை. ஏனெனில் மாட்டிறைச்சியில் கொழுப்புக்கள் நாம் நினைப்பதை விட அதிகமாக இருப்பதால், இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். எனவே உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால், இந்த வகையான இறைச்சிக்கு உடனே தவிர்ப்பதே நல்லது.
கருத்துக்களேதுமில்லை