உலகின் மிகப் பெரிய கிறிஸ்மஸ் மரம் எங்கு தெரியுமா?

இத்தாலியில், குபியோ நகரில் வண்ண விளக்குகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, உலகின் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரம், காண்போரை பிரமிப்படைய வைத்துள்ளது.
அதன்படி 40 ஆண்டுகளாக அங்குள்ள, இங்கினோ மலையில் சாய்வான வடிவில், வண்ண வண்ண விளக்குளால் கிறிஸ்மஸ் மரம் ஏற்றப்படுகிறது.
மரத்தின் உச்சியில், பளிச்சிடும் நட்சத்திரங்கள் பார்ப்பதற்கு, மிக அழகாக காட்சி அளிக்கின்றன.
மேலும் ,750 மீற்றர் உயரமும், 450 மீற்றர் அகலமும் கொண்ட, இந்த மரத்தை உருவாக்க, 1300 மணிநேரங்கள் தேவைப்பட்டதாக இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.