சீனாவில் ஆற்றின் நீரோட்டத்தால் இயற்கையாக உருவான பனிச்சுழல்!
சீனாவில் ஆற்றில் ஏற்பட்ட அரிப்பால் இயற்கையாக உருவான பனி வட்டம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
வடக்குப் பகுதியில் மங்கோலியா அருகே உள்ள உலன்ஹாட் என்ற இடத்தில் தற்போது காலநிலை மைனஸ் 6 டிகிரியாக உள்ளது. இதன்காரணமாக அங்கு ஓடும் ஆற்றின் நீரின் குறிப்பிட்ட பகுதி பனியாக உறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் ஆற்றின் ஓட்டத்தில் உறைந்த பனி வட்ட வடிவமாக உருமாறி, சுழலத் தொடங்கியது.
சுமார் 33 அடி அகலத்தில் மெதுவாகச் சுழலும் பனிக்கட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர். இயற்கையின் பேரதிசயமான பனிச்சுழலைக் கண்ட சிலர் அதன் மேல் ஏறி நின்று புகைப்படம் எடுத்தும் வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை