வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம் – தவிசாளர்

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது என்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சபையின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

கடந்த 8ம் திகதி வரவு செலவு கூட்டம் நடைபெறுவதற்கு முதலே என்னை தாக்கி கூட்டத்தினை நடாத்தவாறு வெளிநடப்பு செய்யப்பட்டது. கூட்டம் நடாத்தவிடாது தொடரச்சியாக இடைஞ்சல்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. பிரதி தவிசாளர் பொலிஸாரை கண்டு ஓடி பின் பக்கமாக களவாக வந்து என்னை தாக்கிய சம்பவம் இடம்பெற்றது.

உண்மையாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி பின் பக்கமாக களவாக வருவதை நினைக்க எமது சபையின் இவ்வாறான உறுப்பினர் சபையில் இருப்பதை நினைக்க வேதனையாக உள்ளது. இவர்கள் கூச்சல் இட்டு என்னை தாக்கினர். அவ்விடத்தில் எமது கட்சி தலைவரின் சகோதரர் இருந்தமையால் அவர் என்னை அழைத்து வைத்தியசாலையில் அனுமதித்தார். இவருக்கெதிரான பல அவதூறுகளை கூறினார். இவர் ஆபத்தான நிலையில் அவ்விடத்திற்கு வந்தார் என்பதை கூறுகின்றேன்.

நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது. அதனால் பல குழப்பங்களை வெளியில் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். நான் ஆசிரியராக இருந்து மக்களுக்கு ஜனநாயக ரீதியில் சேவையாற்றி வருகின்றேன். இதேவேளை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் இன்று சபைக்கு வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட போதும் அவர்கள் கூட்டத்தினை குழப்புவதற்கே முற்பட்டனர்.

எனது ஆடைய கிழித்தது சபை உறுப்பினர்கள் தான். நான் வேணும் என்று எனது ஆடையை கிழிக்கவில்லை. எனது முதுகிலும் குத்தி மார்பில் தாக்கி இருந்தார்கள். சுமார் இரண்டு மாதங்களாக சீசீடிவி கமாரா செயலிழந்து காணப்படுகின்றது. இதனை திருத்துவதற்கு உரிய நபரிடம் கோரிக்கை விடுத்த சமயத்தில் தான் கொரோனா சிகிச்சை வைத்தியசாலையில் கடையாற்றுவதால் வரமுடியாதுள்ளது வந்துதவுடன் திருத்தி தருவதாக கூறினார் என்றார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சபை உறுப்பினர் எஸ்.சுதர்சன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சபை உறுப்பினர் எம்.கபூர், ஐக்கிய தேசிய கட்சியின் சபை உறுப்பினர் எம்.தையூப்;, ஆகியோர் கருத்துக்களை வழங்கினார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.