Facebook மேலும் விஸ்தரிப்பு!

முன்னணி சமூக வலைத்தளமான Facebook ஊடாக அதிகளவில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை அறிந்ததே .
இவற்றில் உண்மை தன்மையை காட்டிலும் போலியான தகவல்களே அதிகளவில் பகிரப்படுகின்றன .
இதனை தவிர்ப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது .
இப்படி இருக்கையில் தனது தளத்தின் ஊடாகவே உண்மை செய்திகளை தனது பயனர்களுக்கு கொண்டு செல்வதற்கு பேஸ்புக்கினால் அறிமுகம் செய்யப்பட்டதே Facebook News என்பதாகும் .
இவ் வசதியானது ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .

இதனை அடுத்த வருடம் ஐக்கிய அமெரிக்காவிற்கு விஸ்தரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
எதிர்வரும் 2020 ஜனவரி 21 ஆம் திகதி இது அறிமுகம் செய்யப்படவுள்ளது . இதற்காக பேஸ்புக் நிறுவனமானது பல முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.