ரஜினிக்காக மட்டுமே வாக்களிக்க விரும்பி 28 ஆண்டுகளாக காத்திருக்கும் ரசிகர் !

“வாக்களித்தால் ரஜினிக்குத்தான் வாக்களிப்பேன்” என்று கூறி 28 ஆண்டுகளாக வாக்களிக்காமல் இருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த ரஜினி ரசிகரான மகேந்திரன் என்பவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினிக்கு வாக்களிக்கவுள்ளதாகக் கூறினார்.

 

இதுகுறித்து மகேந்திரன் கூறுகையில், “சிறு வயது முதலே நான் தீவிர ரஜினி ரசிகன். ரஜினி மீது அளவற்ற பாசம் கொண்டுள்ளேன். ரஜினி ஒரு ஆன்மீகவாதி என்பதால் அவர் மீதான எனது அன்பு இன்னும் கூடுதலானது. அதனால்தான் ரஜினி அரசியலுக்கு வந்த பிறகுதான் வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை 28 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தேன்,” என்றார்.

தற்போது 46 வயதாகும் மகேந்திரன், இதுவரை 15 தேர்தல்களில் வாக்களிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. சிறு வயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார் மகேந்திரன்.

“என் மனைவி ஒரு தேர்தலில் போட்டியிட்டபோதுகூட நான் வாக்களிக்கவில்லை. என் வாக்கு ரஜினிக்காக மட்டும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்போது நான் வாக்களிக்கவில்லை. யாரும் எதிர்பார்க்க முடியாத அரசியல் மாற்றத்தை ரஜினியால் கொண்டுவர முடியும். காமராஜர், எம் ஜிஆர் விட்டுச்சென்ற இடத்தை ரஜினி நிரப்புவார்” என்றார் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.