யாழ் -திருநெல்வேலி பொதுச் சந்தையில் 39 பேரிடம் பி சிஆர் பரிசோதனை

யாழ்ப்பாணத்தில் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி பொதுச் சந்தையில் 39 பேரிடம் இன்று(13) பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய எழுமாறாக 39 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கொத்தணி ஏற்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி சந்தையில் உள்ள வியாபாரிகள் உள்ளிட்ட 39 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டுள்ளன

இந்த மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.