480 பூனைகளை வீட்டில் வளர்க்கும் வினோத பெண்…
ஓமான் தலைநகர் -மஸ்கட்டில் வசிக்கும் மரியம் அல் பலூஷி எனும் இப்பெண் அவ்வீட்டில் சுமார் 500 செல்லப்பிராணிகளை மரியம் வளர்க்கிறார் இதில் . 480 பூனைகள், 12 நாய்கள் ஆகியன செல்லப்பிராணிகள் அவ்வீட்டில் வளர்க்கப்படுகின்றன.
வீட்டுக்குள் இவ்வளவு பெரும் எண்ணிக்கையான பிராணி வளர்ப்பது குறித்து அயலவர்கள் பலர் விசனம் தெரிவித்துள்ளனராம். இப்பிராணிகளை பராமரிப்பதற்காக அதிகளவு பணத்தையும் மரியம் செலவிடுகிறார்.
எனினும், இப்பிராணிகள் தனது மனதுக்கு உற்சாகமூட்டுவதாகவும், மனிதர்களை அவை சிறந்த துணையாக உள்ளதாகவும் சர்வேதேச ஊடகமான ஏ.எவ்.பியிடம் மரியம் அல் பலூசி தெரிவித்துள்ளார்.
‘இம்மிருகங்கள் குறிப்பாக, பூனைளும் நாய்களும் மனிதர்களைவிடக் கூடுதலான விசுவாசமுடையவை என்கிறார் மரியம். 51 வயதான மரியம் அரச ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மேற்படி மிருகங்களில் பெரும்பாலானவை, வீதிகளில் துன்பப்பட்ட நிலையிலிருந்து மீட்கப்பட்டவையாகும். அவற்றில் 17 பிராணிகள் பார்வையற்றவை.
ஓமானில் செல்லப்பிராணிகளை வீதிகள் முதலான இடங்களில் கைவிட்டுச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
2008 ஆம்ஆண்டு எனது மகன் வீட்டுக்கு பூனையொன்றை கொண்டு வந்தான். பல தாய்மார்களைப் போன்று நானும் அப்பூனையை வீட்டுக்குள் எடுக்க விரும்பவில்லை. அப்போது மிருகங்களை நான் விரும்பவில்லை.
ஆனால், 2 வருடங்களின் பின் மற்றொரு பூனையை மரியம் வளர்க்க ஆரம்பித்தபோது மிருகங்கள் மீதான அவரின் அணுகுமுறைகள் மாறின. 2014 ஆம் ஆண்டு சொந்த வீடு வாங்கியபின் மேலும் அதிக மிருகங்களை அவர் வளர்க்க ஆரம்பித்தார்.
இப்பிராணிகளுக்காக மாதாந்தம் சுமார் 7,800 டொலர்களை (சுமார் 15 இலட்சம் ரூபா) அவர் செலவிடுகிறார் என ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை