வவுனியா சிறைச்சாலையில் ஒருவருக்கு கொரோனா !
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலையை சேர்ந்த இவருக்கு, கடந்த 12ஆம் திகதி பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றையதினம் (13) பரிசோதனைக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் அவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பான ஏனைய நடவடிக்கைகளை, சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை