லொறி- மோட்டார் சைக்கிள் விபத்து-சைக்கிள் சாரதிக்கு படுகாயம் திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் சம்பவம்
திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி பம்மதவாச்சி பகுதியில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து இன்று (14) காலைஇடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த லொறி அதே பக்கமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகவும் மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற நிலையில் பொலிசார் வாகனத்துடன் சாரதியை கைது செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்விபத்தில் இலங்கை மின்சார சபை கிண்ணியா கிளையில் சாரதியாக கடமையாற்றும் அனுராதபுரம்-மதவாச்சி பகுதியைச் சேர்ந்த சமன்குமார (38வயது) என்பவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கடமையில் இருந்து விடுமுறைக்காக வீட்டுக்கு செல்லும் வழியில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கருத்துக்களேதுமில்லை