வவுனியா இளைஞர்கள் இருவர் படகு விபத்தில் பரிதாப மரணம்…

வெளிநாட்டில் வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் படகு விபத்தில் பலியாகியுள்ளனர்.

ஆபிரிக்க நாடான மொரோக்கோ பகுதியில் இருந்து ஸ்பெயினுக்கு இம்மாதம் 3ஆம் திகதி புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த படகொன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் பயணித்த 9 பேர் இறந்துள்ளனர். இதில் இலங்கையை சேர்ந்த இருவர் உள்ளடங்குகின்றனர்.

வவுனியா, குருமன்காடு பகுதியைச் சேர்ந்த ப.பிரசன்னா (வயது 27) மற்றும் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் கவிஞன் (வயது 24) ஆகிய இருவரது உடல்கள் மொரோக்கோவில் உள்ள ‘லைவான்’ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என அந்த நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விபத்துக்குள்ளான படகில் இருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் இலங்கையைச்  சேர்ந்த காந்தன் இந்திரமோகன் என்பவர் ஆவார்.

படகு விபத்தில் இறந்த இருவரது உடல்களையும் இலங்கைக்குக் கொண்டுவருவதற்கு யாழ்ப்பாணத்திலுள்ள வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகத்தின் ஊடாக இறந்தவர்களின் குடும்பத்தினர் உதவியை நாடியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.