ரஷ்யாவில் முதியோர் காப்பகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வயது முதிர்ந்த 11 பேர் உடல் கருகி பலி !
ரஷ்யாவில் முதியோர் காப்பகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வயது முதிர்ந்த 11 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாஷ்கோர்டோஸ்தான் பிராந்தியம் இஸ்புல்டினோ கிராமத்திலுள்ள மர கட்டிடத்தில் குறித்த காப்பகம் செயற்பட்டு வந்துள்ளது.
அந்நிலையில் நேற்றைய தினம் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், எழுந்து நடக்க முடியாத நிலையிலிருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ,இத் தீ விபத்தில் காப்பக ஊழியர் உள்ளிட்ட 4 பேர் உயிர் தப்பியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை