மீனவர்களின் கவனயீர்ப்பிற்கு ஆதரவாக சட்டத்தரணி தனஞ்சயன்…

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் நான்காவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறிப்பாக நான்காம் நாளில் உப்புமாவெளி மீனவர்சங்கம் மற்றும், முல்லைத்தீவு மாவட்ட சம்மாட்டிமார் சங்கம் என்பன இணைந்து கவனயிர்ப்பை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சட்டத்தரணி சின்னராசா தனஞ்சயன் கலந்துகொண்டிருந்தார்.

இவ்வாறு கலந்துகொண்டிருந்த அவர், மீனவர்களுக்கு சட்டரீதியான உதவிகளைச் செய்வதற்கு தாம் தயாராகஇருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த கவனயீர்ப்புக்கு ஆதரவாகமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் கலந்துகொண்டுளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.