பொதுமக்களின் பங்களிப்பில் தான் கொவிட் 19 ஒழிப்பு தங்கியுள்ளது-வைத்தியர் ஜி.சுகுணன்
கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற கொவிட் தொற்றாளர்களான 81 வீதமானவர்களை கல்முனை பிராந்தியம் கொண்டுள்ளது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் குறிப்பிட்டார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வெள்ளிக்கிழமை(18) மாலை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.லதாகரன் தலைமையில் நடைபெற்ற விசேட உயர்மட்ட கூட்டத்தின் பின்னரான செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்
கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற கொவிட் தொற்றாளர்களான 81 வீதமானவர்களை கல்முனை பிராந்தியம் கொண்டுள்ளது.இதனால் எமது நடவடிக்கைகளை மேம்படுத்தும் நிலையில் நாம் இருக்கின்றோம்.அக்கரைப்பற்று உப கொத்தணியை தொடர்ந்து நேற்று(17) பல பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றன.
—
கருத்துக்களேதுமில்லை