நாட்டில் 3 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் 3 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ மற்றும் உடுதும்பற ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாத்தளை மாவட்டத்தின் எலஹெர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை