வவுனியாவில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்…
வவுனியாவில் கொரோனா தொற்றுடன் மாணவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்திற்குட்பட்ட வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, காமினி மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் தற்காலிகமாக மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்தது .
குறித்த மாணவி வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நகரப்பகுதி பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் வவுனியா, கற்குழி, முதலாம் ஒழுங்கையைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மாணவியின் வீடு அமைந்துள்ள கற்குழியின் முதலாம் ஒழுங்கைப் பகுதி முடக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மாணவியுடன் தொடர்புடையவர்களிடம் பிசீஆர் பரிசோதனையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம் இன்று திங்கட்கிழமை 21/12/2020 முதல் திறந்து கல்விச்செயற்பாடுகளை வழமை போன்று முன்னெடுக்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை