மட்டு -கோறளைபற்று பிரதேச செயலக பிரிவில் 16 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதைகள் நீரினால் முழ்கியது ;இயந்திப்படகுகள் சேவையில்…

மட்டக்களப்பில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிடும் பணிகளில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும்
அரசாங்க அதிபர் க.கருணாகரன், அனர்த்த முகாமைத்து நிலையத்தின் உத்தியோகத்துருடன் கிரான் பிரதேச செயலாளர் சு.ராஜ்பாவு பார்வையிட்டனர்.

மக்களுக்கான நிவாரணப்பணிகள் அவசியமான இடத்து உடனடியாக செயல்பட்டு வழங்குவதற்கான நடவடிக்கை குழு தயாராகவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
கிரான் கோரளைபற்று ,தெற்கு பிரதேசம் தற்போது துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் போக்குவரத்திற்கு கடற்படையினரின் இயந்திரப்படகுகளும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இயந்திப்படகுகளும் சேவையில் உள்ளது.

கோரளைபற்று தெற்கு பிரதேசசெயலக பிரிவுகளில் 6 கிராமசேவகர் பிரிவுகளை சாந்த கொராவெளி ,குடும்பிமலை பெரிலாவெளி ,மியாங்கற்குளம் புலிபாய்ந்தகல் பொண்டுகள்சேணை பூலாக்காடு முறுத்தாணை பிரம்படித்தீவு போன்ற 16 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.