கொவிட் வைரஸின் புதிய வடிவத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் பற்றி ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் கூட்டம் !

கொவிட் வைரஸின் புதிய வடிவத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் பற்றி ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த வைரஸ் பற்றி கூடுதல் தகவல்களை அறியவேண்டி இருப்பதாக ஸ்தாபனத்தின் ஐரோப்பிய பிராந்தியத்திற்கான பிரதிநிதி ஹான்ஸ் குளுக் தெரிவித்தார். இத்தகைய தகவல்கள் கிடைக்கும் வரையில் பயணங்களை கட்டுப்படுத்துவதும், சுகாதார விதிமுறைகளை அனுசரிப்பதும் கட்டாயமானதென குளுக் தெரிவித்தார்.

புதிய வடிவம் குறித்து அநாவசியமாக பயப்படத் தேவையில்லை. ஒரு பெருந்தொற்றின் போது நுண்ணுயிரிகள் வடிவம் மாறி புதியவை உருவாவது வழமை என உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.