கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல்களால் மூடப்பட்ட தபால் நிலையங்கள் திறக்கப்பட்டன

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல்களால்  மூடப்பட்ட தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கடந்த சனிக்கிழமை(12) தபால் நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகள் வெளியாகியதை தொடர்ந்து மூவர்  தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இவர்களில் சேனைக்குடியிருப்பு,பாண்டிருப்பு, கல்முனை பகுதியை சேர்ந்த தபால் விநியோகிக்கும் ஊழியர்களாவர்.இந்நிலையில் இவ்வாறு மூவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கடந்த ஞாயிறு முதல் வியாழக்கிழமை(17) இன்று வரை தபால் நிலையங்கள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மூடப்பட்டுள்ள தபால் நிலையங்கள்  இன்று (26 )ஆம் திகதி அளவில் திறக்கப்பட்டு வழமை போன்று இயங்கியதை காண முடிந்தது.

கடந்த காலங்களில்   அம்பாறை மாவட்டத்தில்  கல்முனை   பிரதான தபாற்கந்தோர் உட்பட 7 தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.