(வீடியோ) பாசிக்குடாவில் சுனாமி பேரனர்த்ததினால் உயிர் நீர்த்தவர்களின் உறவுகள் தீபம் ஏற்றி அஞ்சலி!

உலகை உலுக்கிய சுனாமி பேரனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 16 வருடமாகின்றது. இதனை முன்னிட்டு இன்று (26.12.2020) இலங்கையின் கரையோரப்பிரதேசங்களில் சுனாமி நினைவுதின நிகழ்வுகள் சுகாதார நெறிமுறைக்கிணங்க பரவலாக இடம் பெற்றன.

அந்த வகையில் பாசிக்குடா பொதுமக்களின் ஏற்பாட்டில் பாசிக்குடா கடற்கரைக்கு அண்மித்துள்ள நினைவு தூபியில் உயிர் நீர்த்தவர்களின் உறவுகள் இறந்தவர்களுக்கு தீபம் ஏற்றி ஆத்ம அஞ்சலி செலுத்தினர்.

இப் பேரனர்த்தத்தில் சிக்கி 38ஆயிரத்து 195பேர் இலங்கையில் பலியாகினர். அதிலும் வடக்கு கிழக்கில் 16934பேர் பலியாகினர். 5589பேர் காணாமல்போயிருந்தனர். கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 512 பேர் மரணம் அடைந்ததுடன் நாட்டில் பல பில்லியன் கணக்கில் சொத்து சேதங்கள் ஏற்பட்டன.

பாசிக்குடாவில் இடம் பெற்ற நினைவு நாள் நிகழ்வில் பாசிக்குடா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு கே.ஏரம்பமூர்த்தி மற்றும் பாசிக்குடா பெரேயா ஜெப வீடு போதகர் என்.ஸ்ரீகாந் ஆகியோர் பிராத்தனைகளை நடாத்தினர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.