கிளிநொச்சியில் ஒருவர் குத்திக் கொலை!
கிளிநொச்சி – முழங்காவில் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பல்லவராயன், கட்டச்சோலை மாதிரி கிராமத்தில் இன்று (26) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்
இந்த சம்பவத்தின்போது செல்வரத்தினம் பிரதீபன் என்ற 32 வயதுடைய இளைஞரே கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலத்தின் கழுத்து பகுதியில் முறிவுகள் காணப்படுவதாகவும் கால் பகுதியில் வெட்டுக்காய்கள் காணப்படுவதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்த முழங்காவில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை