சிறுபான்மை சமூகத்திற்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு ஒரு தற்காலிக தீர்வே மாகாணசபை: அந்த உரிமையை இழக்க முடியாது! மஸ்தான் எம்.பி…
சிறுபான்மை சமூகத்திற்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு ஒரு தற்காலிக தீர்வாகவே மாகாணசபை வந்தது. எனவே அந்த உரிமையை நாம் இழக்க முடியாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (30.12) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைகள் தொடர்பில் ஒவ்வொருவரும் தெரிவிக்கும் கருத்துக்கள் அவர்களது தனிப்பட்ட கருத்துக்கள். மாகாணசபைகள் இயங்க வேண்டும். சிறுபான்மை சமூகத்திற்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு ஒரு தற்காலிக தீர்வாக மாகாண சபைகள் அப்போது வந்தன. இருக்கும் அந்த உரிமைகளை நாம் இழக்க முடியாது. கடந்த அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட தேர்தல் முறை மாற்றம் தான் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. விரைவாக இந்த அரசாங்கத்தால் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும்.
கட்சித் அதலைவர்களின் விருப்பதுடன் மாகாண சபை செயற்படுத்தப்படும். அது இல்லாமல் போகாது. எமது அரசாங்கம் வந்து மூன்று மாதங்கள் தான். ஆனால் அதற்கு முதல் ஒன்றரை வருடங்களாகவே மாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை. ஆகவே காலதாமதம் ஏற்படுமே தவிர, மாகாண சபை தேர்தல் இல்லாமல் போகாது எனத் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை