வெளிநாடுகளில் கொரோனாவின் கொடூரத்தால் 59,377 பேர் மீண்டும் இலங்கை திரும்பல்…
கொரோனா வைரஸ் தொற்றால் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த 59 ஆயிரத்து 377 இலங்கையர்கள் இதுவரை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சுமார் 137 நாடுகளிலில் இருந்த இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இவர்களில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 26 ஆயிரத்து 812 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து 5 ஆயிரத்து 484 பேரும், ஆபிரிக்க வலய நாடுகளிலிருந்து 2 ஆயிரத்து 26 பேரும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
11 ஆயிரத்து 323 பேர் டிசம்பர் மாதத்தில் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் நிர்க்கதியாகச் சிக்கியுள்ள அல்லது பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ள வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்குத் திரும்ப அழைத்து வருவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமையவே, வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயன்முறை தொடர்கின்றது” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை