இவ்வளவு பெரிய வாழ்த்து அட்டையா? துபாயில் கின்னஸ் செய்து மாஸ் காட்டும் தமிழர்!

ராம்குமார் சாரங்கபாணி. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஆனால், 17 ஆண்டுகளுக்கு முன்பே துபாயில் குடும்பத்துடன் குடியேறிவிட்டார். மிகப்பெரிய வாழ்த்து அட்டைகளை தயாரிப்பது, அதேபோல, மிகச்சிறிய சீட்டுக்கட்டை உருவாக்குவது என வித்தியாசமான நடவடிக்கைகளால், பல சாதனைகளை செய்து கின்னைஸ் சாதனை புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளார்.

அண்மையில் துபாய் மன்னராக ஷேக் முகமது பதவியேற்ற 15வது ஆண்டுவிழா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த இரண்டு விழாக்களையும் முன்னிட்டு ராம்குமார் மிகப்பெரிய அளவில் ராட்சத வாழ்த்து அட்டையை உருவாக்கி அசத்தியுள்ளார்.

மொத்தம் 4 மீட்டர்நீளமும், 2.05 மீட்டர் அகலமும் கொண்ட இந்த வாழ்த்து அட்டை, காண்போரை வியக்க வைக்கிறது. இது வழக்கமான வாழ்த்து அட்டைகளை விட 100 மடங்கு பெரியது. புகழ்பெற்ற ஓவியர் அக்பர் சாஹெப் வரைந்த துபாய் மன்னர் ஷேக் முகமதுவின் ஓவியங்கள் அதில் இடம்பெற்றிருந்தது தனிச்சிறப்பு. மேலும், மேல்பக்கம் ஓர் உறையைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அந்த வாழ்த்து அட்டையின் பரப்பு 8.20 செ.மீ. இதற்கு முன்னதாக 6.79 செ.மீ பரப்பு உடைய வாழ்த்து அட்டை ஹாங்காங்கில் உருவாக்கப்பட்டு, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.இந்நிலையில் இந்த சாதனையை ராம்குமார் முறியடித்துள்ளார்.

கடந்த ஆறு மாத கால உழைப்பு அவருக்கு கைகொடுத்துள்ளது. இரவு, பகல் பாராமல், இந்த வாழ்த்து அட்டையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அவர். நாளை தோஹா மையத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சின் தேசிய தின விழா துவங்க உள்ளது. இதில் இந்த கின்னஸ் வாழ்த்து அட்டை பொதுமக்கள் பார்வைக்கு கொரோனா முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கல்ஃப் நியூஸூக்கு அவர் அளித்த பேட்டியில், “

நான் கடந்த 6 மாதங்களாக இதற்காக உழைத்தேன். நாட்டை பெருமைப்படுத்தும் வகையிலும், கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்க வேண்டும் என்றும் சரியான நேரத்துக்காக காத்துக் கொண்டிருந்தேன். ஷேக் முகமதுவின் 15வது தினத்தை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் இருந்திருக்க முடியாது. அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் உருவான 50வது ஆண்டிற்கும் இதை அர்ப்பணிக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

( மெகாசைசஸ் வாழ்த்து அட்டை; 6மாத உழைப்பு – துபாயில் தமிழரின் கின்னஸ் சாதனை)

 

 

 

படங்கள் உதவி: கல்ஃப் நியூஸ் | தொகுப்பு: மலையரசு

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.