பால் விற்று பிள்ளைகளை படிக்க வைத்தேன் ; 1.10 கோடி ரூபாய்க்கு பால் விற்று சாதனை படைத்த குஜராத்தை சேர்ந்த பெண் !
குஜராத்தைச் சேர்ந்த நவல்பென் தல்சங்பாய் என்ற 62 வயதான பெண்மணி கடந்த 2020ம் ஆண்டில் 1.10 கோடி ரூபாய்க்கு பால் விற்று சாதனை படைத்துள்ளார். தனியொரு பெண்ணாக அவர் நிகழ்த்தியிருக்கும் சாதனை உண்மையில் பாராட்டத்தக்கது. குஜராத்தில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் நாகனா கிராமத்தைச் சேர்ந்தவர் நவல்பென் தல்சங்கபாய். தனியொரு பெண்ணாக தன் மாவட்டத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அவரது மாத வருமானம் எவ்வளவு தெரியுமா? ஒவ்வொரு மாதமும் பால் மட்டுமே விற்று சுமார் ரூ.3.50 லட்சம் வரை லாபம் பார்த்து வருகிறார்.
சுற்றியிருக்கும் பல கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு பால் விநியோகம் செய்து வருகிறார் அவர். அங்கிருக்கும் சுற்றவட்டார மக்களின் பால் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நவல்பென், முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளார். நவல்பென்னிடம் இப்போது 15 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.
பால் விற்பனை சாதனை மூலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் இரண்டு லட்சுமி விருதுகள் மற்றும் மூன்று சிறந்த பசுபாலக் விருதுகளை வென்றுள்ளார் அவர். இது தொடர்பாக பேசிய அவர், “எனக்கு நான்கு மகன்கள் உள்ளனர், அவர்கள் நகரங்களில் படித்து வேலை செய்கிறார்கள். ஆரம்பத்தில் பால் பண்ணை ஒன்றைத் தொடங்கினார். அப்போது அவர் பல்வேறு சவால்களைக் கடக்க வேண்டியிருந்தது. குழந்தைகளைப் படிக்க வைத்தேன் .
,. ஆரம்பத்தில், பால் பண்ணையை சிறிய அளவில் தொடங்கி நடத்தினேன். தற்போது, 80 எருமைகள் மற்றும் 45 மாடுகள் கொண்ட ஒரு பால்பண்ணையாக அது வளர்ச்சியடைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், ரூ.87.95 லட்சம் மதிப்புள்ள பாலை விற்று பனஸ்கந்தா மாவட்டத்தில் முதல் இடத்தில் இருந்தேன். 2020 ஆம் ஆண்டில் ரூ 1 கோடி 10 லட்சம் மதிப்புள்ள பாலை விற்பனை செய்வதன் மூலம் இந்த ஆண்டும் முதலிடத்தில் இருக்கிறேன், எனஅவர் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை