யாழ் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 1,047 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 358 குடும்பங்களைச் சேர்ந்த 1,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

 கடும் மழை காரணமாக 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.