பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற கணவரை தோளில் தூக்கிவைத்து கொண்டாடிய மனைவி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற கணவரை மனைவி ஒருவர் தோளில் தூக்கி வைத்து ஆடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 15-ம் தேதி 34 மாவட்டங்களை உள்ளடக்கிய 14,234 பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. பாலு என்கிற பஞ்சாயத்துக்கு தலைவராகப் போட்டியிட்ட சந்தோஷ் சங்கர் குரா என்பவர் வெற்றி பெற்றார். இதனால் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற அவரின் மனைவி ரேணுகா கணவரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடி மகிழ்ந்தார்.
கருத்துக்களேதுமில்லை