அமெரிக்காவின்புதிய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் : அவரின் பங்குகளும், பொறுப்புகளும் என்ன?
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் அதிபராக தேர்தந்தெடுக்கப்பட்டார். கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பிடென் மற்றும் 49 வது துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டனர். மேலும் துணை அதிபரான கமலா ஹாரிஸ் நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற வரலாறு சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து கமலா ஹாரிஸ் கூறுகையில், “அமெரிக்க அபிலாஷ்கள் எல்லோரும் ஒன்றுபட வேண்டும், ” “நல்லதைச் செய்யுங்கள் நம்மை நாம் நம்ப வேண்டும், நம் நாட்டை நம்புங்கள், நாம் ஒன்றாக இணைந்து எதையும் செய்ய முடியும் என்று நம்புங்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க வரலாற்றில் பதட்டமான தருணங்கள் முடிந்துவிட்டது, என்று குறிப்பிட்டுள்ளார்.
கமலா ஹாரிஸ் துணைத் தலைவராக எங்கே இருப்பார்?
அமெரிக்க ஊடகங்கள் அளித்த தகவலின் படி, கமலா ஹாரிஸ் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் சூழ்நிலை இருப்பதால், துணை அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அவர் செல்லமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் வடமேற்கு வாஷிங்டன் டி.சி.யில் உள்ள நம்பர் ஒன் கண்காணிப்பு இல்லத்திற்கு செல்வார் என்றும், இந்த இல்லம், 1893 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட 19 ஆம் நூற்றாண்டு வீடு என்று கூறப்படுகிறது. கடந்த 1977-ம் ஆண்டு முதல் 81-ம் ஆண்டுவரை வால்டர் மொண்டேலின் காலத்திலிருந்து துணைத் தலைவர்கள் வசித்த இடமான இந்த இடம் உள்ளது.
கவனிக்காத இந்த மாசசூசெட்ஸ் அவென்யூவ் வீடு அமெரிக்க கடற்படை ஆய்வகத்தின் கண்கானிப்பில் உள்ளது, இது முதலில் யு.எஸ்.என்.ஓவின் கண்காணிப்பாளருக்காக ஒதுக்கபட்டிருந்தது. மேலும் மொண்டேலுக்கு முன்பு, பல துணைத் தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தங்களது வீடுகளில் தங்கியிருந்தனர், ஆனால் இந்த தனியார் குடியிருப்புகளில் வசிப்பதற்கு காலப்போக்கில், செலவுகள் அதிகரித்ததால், கடந்த 1974 ஆம் ஆண்டில், கடற்படை ஆய்வகத்தில் உள்ள இந்த வீட்டை துணை ஜனாதிபதியின் இல்லமாக புதுப்பிக்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டது.
அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பின்பும் இந்த வீட்டில் முதல் குடியிருப்பாளர் குடியேறுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது. துணை ஜனாதிபதியாக இருந்த ஜெரால்ட் ஃபோர்டு ஜனாதிபதி பதவிக்கு ஒப்புக் கொண்டதிலிருந்து, துணை ஜனாதிபதியாக இருந்த நெல்சன் ராக்பெல்லர் இந்த வீட்டை பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, இந்த வீட்டை ஜெரோஜ் புஷ், அல் கோர், டான் குயல், டிக் செனி, பிடென் மற்றும் மிக சமீபத்தில் மைக் பென்ஸ் குடும்பங்கள் வசித்து வந்தனர்.
அமெரிக்க துணை ஜனாதிபதியின் பொறுப்புகள் என்ன?
துணை ஜனாதிபதி செனட்டின் தலைவராக இருப்பார். ஜனாதிபதி இறந்துவிட்டாலே, ராஜினாமா செய்தாலோ அல்லது தற்காலிகமாக இயலாமையில் இருந்தாலோ, ஜனாதிபதியின் பொறுப்பை துணை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார். ஆனால் துணை ஜனாதிபதியின் அலுவலகம் பெரும்பாலும் மத்திய அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தி நியூயார்க் டைம்ஸின் ஒரு அறிக்கையில், கமலா ஹாரிஸுக்கு இப்போது ஒரு குறிப்பிட்ட எந்த பணியுடம் ஒதுக்கப்படவில்லை என்றாலும், அதிபர் ஜோ பிடனின் முன்னுரிமைகள் அவரது நிர்வாகத்தில் குறிப்பிட்ட ஒரு பங்காளராக பணியாற்றுவார். இந்த பொறுப்புகளை அவர் சரியாக செய்யும் பட்சத்தில், அவர் “வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க துணைத் தலைவர்களில் ஒருவராக” மாறுவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 1857-ம் ஆண்டு துணை அதிபராக பொறுப்பேற்ற ஜான் ப்ரெக்கின்ரிட்ஜ் 36 வயதாகி இருந்தார். இவரே இளம் வயதில் துணை அதிபராக பொறுப்பேற்ற முதல் நபர் என்ற பெருமை பெற்றுள்ளார். தொடர்ந்து 1949 இல் துணை ஜனாதிபதியாக பதவியேற்ற ஆல்பன் பார்க்லி-க்கு அப்போது 71 வயது. இதன் மூலம் மூத்த வயதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முதல் நபர் என்ற பெருமை பெற்றுள்ளார். இதன் பின்னர் ஐந்து துணைத் தலைவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்,
துணை ஜனாதிபதியாக இருந்து இதுவரை எட்டு பேர் ஜனாதிபதியாக பதவியேற்றனர். இதில் தியோடர் ரூஸ்வெல்ட் (1906), சார்லஸ் டேவ்ஸ் (1925) மற்றும் அல் கோர் (2007) உள்ளிட்ட மூன்று துணைத் தலைவர்கள் அமைதிக்கான நோபல் பரிசுகளையும் வென்றுள்ளனர். இதுவரை பணியாற்றிய துணை அதிபர்கள் அனைவரும் அதிபருக்கு எதிராகவே இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துணைத் தலைவர்களுக்கும் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான உறவு
எலைன் சி கமர்க் எழுதிய துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது” என்ற இ- புத்தகத்தில், வரலாற்று ரீதியாக துணைத் தலைவர்கள் தாங்கள் பணியாற்றிய ஜனாதிபதிகள் விரும்பவில்லை என்றும், துணை ஜனாதிபதிகளுக்கு குறைவான பொறுப்புகளே வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் 20 ஆம் நூற்றாண்டில் துணை ஜனாதிபதி பதவிக்கு சமநிலைப்படுத்தும் மாதிரி மற்றும் கூட்டாண்மை மாதிரி, என இரண்டு மாதிரிகள் இருந்தன .
இது குறித்து ஒரு அமெரிக்க அரசாங்க வலைத்தளத்தின் வெளியான ஒரு கட்டுரையில், முந்தைய காலங்களில் அதிக பொறுப்புகளை உள்ளடக்குவதற்கும், அதிக முக்கியத்துவத்தை அளிப்பதற்கும் இந்த பணி உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி பதவி, தற்போது நகைச்சுவையானதாக உள்ளது. ஆனாலும் வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் (சி.எஃப்.ஆர்) படி, அமெரிக்க வரலாற்றின் பெரும்பகுதி முழுவதும், துணை ஜனாதிபதியின் அலுவலகம் அதிக அதிகாரம் கொண்டதாக இல்லை.
ஆனால் கார்டரின் நிர்வாகத்தின் கீழ் இந்த நிலை மாறியது. கார்டர் தனது அதிகாரத்தில், முதலில் தனது துணைத் தலைவருக்கு (மொண்டேல்) பல சலுகைகளை வழங்கினார், “உளவுத்துறை விளக்கங்கள், வழக்கமான கூட்டங்கள், ஒரு தனியார் வாராந்திர மதிய உணவு மற்றும் மேற்கு விங்கில் உள்ள அலுவலகம் ஆகியவற்றிற்கு தடையின்றி செல்வது போன்ற பல சலுகைகளை வழங்கினார். மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மாநில மற்றும் பாதுகாப்பு செயலாளர்களுடன் துணை அதிபர் மொண்டேலை வெளியுறவுக் கொள்கைக்கு அழைத்துள்ளார். இதன் மூலம் கார்ட்டர் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை முடிவுகளில் மொண்டேல் அதிக பங்கு வகித்துள்ளார் என்பதை காட்டுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி, பராக் ஒபாமா அதிகாரத்தில் இருந்தபோது பிடென் துணை ஜனாதிபதியாக இருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையில், உருவான டைனமிக் பெரும்பாலும் “ப்ரொமன்ஸ்” என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் நிர்வாகத்தில், பிடனும் ஒபாமாவும் அரசியல் நம்பிக்கைகளும் “எப்போதும் ஒத்துப்போகவில்லை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
tamil. indianexpress
கருத்துக்களேதுமில்லை