மியண்டாட் “எப்.எஸ்.கே.”பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டியின் அறிமுகம்!

(எம்.என்.எம். அப்ராஸ் ,ஐ.எல்.எம். நாஸீம், நுருள் ஹுதா உமர்)

அம்பாறை மாவட்டத்தில் சுமார் 30  வருடமாக இயங்கிவரும் சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டு கழகத்தின்  ஏற்பாட்டில் நடைபெறவுள்ள “எப்.எஸ்.கே. மியண்டாட் பிரீமியர் லீக்” கிரிக்கட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப அறிமுக நிகழ்வுகள்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் கழகத்தின் தலைவர் ஏ. பாயிஸ் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை  (05) மாலை நடைபெற்றது.

மருதூர் வாரியர்ஸ், பொலி லயன்ஸ்  ,மாளிகா யுனைடெட், சாந்தம் சலஞ்சர்ஸ், ஆகிய நான்கு அணிகள் மோதவுள்ளன .

“எப்.எஸ்.கே. மியண்டாட் பிரீமியர் லீக்” கிரிக்கட் சுற்றுப்போட்டியின் கழக உரிமையாளர்கள் கலந்து கொண்டு  இந் நிகழ்வில் கழக சீருடைகளை அறிமுகம் செய்து வைத்ததுடன், வெற்றி கிண்ணங்களும், பரிசில்களும், லீக் சுற்றுத்தொடரின் கொடியும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டு கழக லீக் சுற்றுத்தொடர் தலைவர் எஸ்.எம்.அமீர்,  தவிசாளர் எம்.ஜே.எம். காலித் அடங்கிய  நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இச்சுற்று போட்டிகளில் நான்கு அணிகள் ஏழு போட்டிகள் என எதிர்வரும் 19 மற்றும் 20ம் திகதிகளில் சாய்ந்தமருது வெலிவோரியன் மைதானத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.