மட்டக்களப்பின் சில பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் சில இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில இடங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 06.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் 162 ஏ காத்தான்குடி 06 தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 162 பீ காத்தான்குடி 06 மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 164 காத்தான்குடி 04 கிராம உத்தியோகத்தர் பிரிவு, 164 பீ காத்தான்குடி 05 வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 164 ஏ காத்தான்குடி 05 கிராம உத்தியோகத்தர் பிரிவு, 164 சீ காத்தான்குடி 04 மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 காத்தான்குடி 01 கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 சீ புதிய காத்தான்குடி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 டீ காத்தான்குடி மேல் கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 ஈ காத்தான்குடி மத்திய கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று மாத்தளை மாவட்டத்தில் இஸ்மான் மாவத்தை, மீதெணிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் வரகாமுர பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் காத்தான்குடி 166 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவின் மோனினார் வடக்கு, சின்னதோன வீதி, கப்பூர் பிளேஸ், டெலிகொம் வீதி, முதலாம் குறுக்குத் தெரு, பௌசி மாவத்தை ஆகிய பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை