என்னால் 2,153 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் ; நபர் ஒருவர் செய்த வினோத காரியம்! என்ன தெரியுமா?
அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தன்னுடைய எலும்பு மஞ்ஞையின் சில பகுதிகளை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக சில புதிய ஸ்டெம் செல்களை பொருத்தி இருக்கிறார். இதன் மூலம் அவர் அடுத்த 100 ஆண்டுகளுக்கு நல்ல உடல் நலத்துடன் இருப்பேன் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். மேலும் சில சிகிச்சை முறைகளைப் பின்பற்றி என்னால் 2,153 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் என்றும் கூறி வருகிறார். இந்தத் தகலை அடுத்து பலரும் வியப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
டேவ் ஆஸ்ப்ரே எனும் 41 வயது தொழில் அதிபர் 25 ஆயிரம் டாலர் இந்திய மதிப்பில் 18 லட்சம் செலவு செய்து எலும்பு மஞ்ஞையில் புதிய ஸ்டெம் செல்களை பொருத்தி இருக்கிறார். அதோடு 40 வயது முடிந்த எல்லோரும் இதுபோல ஸ்டெம் செல்களை பொருத்திக் கொள்வதன் மூலம் அடுத்த 100 ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் வாழ முடியும் என்றும் ஆலோசனை வழங்கி வருகிறார். இதைத் தவிர பயோ ஹேக்கில் எனும் சிகிச்சை முறையை பயன்படுத்தி 2,153 ஆண்டுகள் வரை வாழ வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகிறார்.
இதற்காக குளிர்ந்த கிரையோதெரபி என்ற சிகிச்சை முறையை பின்பற்றவும் செய்கிறார். குளிச்சி நிறைந்த குடுவை போல் இருக்கும் ஒரு பெட்டியில் மணிக்கணக்காக அமர்ந்து கொண்டு பட்டிணி கிடப்பது, சில வினோத சிகிச்சை முறைகளை மேற்கொள்வது போன்ற செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். இவரைப் பார்த்து வியந்த சிலர் ஏன் இவ்வளவு ஆண்டு வாழ விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு பதில் அளித்த டேவ் வாழ்க்கையை இன்னும் மேம்படுத்த வேண்டும். 40 ஆண்டுகள் போனதே தெரியவில்லை. அதனால் வாழ விரும்புகிறேன் எனக் கூறி மற்றவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.
கருத்துக்களேதுமில்லை