மீன் குழம்பு வைக்காததால் ஆத்திரம்! – போதையில் மனைவியை வெட்டிய கணவன்!

சிவகங்கையில் மீன் குழம்பு வைக்காத மனைவியை கணவன் மதுபோதையில் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாண்டி. இவர் மீது இவர் முதல் மனைவியின் மூக்கை அறுத்ததாக வழக்கு உள்ளது. மேலும் தனது தாயை கொன்ற வழக்கில் கடந்த சில ஆண்டுகள் முன்னர் சிறை சென்ற இவர் தற்போது ஜாமீனில் வந்து தனது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்யும் பாண்டு சம்பவத்தன்று குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். தனது இரண்டாவது மனைவியிடம் மீன் குழம்பு வைக்க சொல்ல இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டி கோடாரியால் மனைவியின் தலையில் தாக்கியுள்ளார்.

இதனால் மயங்கி விழுந்த அவரது மனைவியை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பாண்டியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.