மியண்டாட் எப்.எஸ்.கே சுற்று தொடர் பிரிமியர் லீக்” கிண்ணத்தை வென்றது பொலி லயன்ஸ் அணி
(எம்.என்.எம்.அப்ராஸ்,நூருல் ஹுதா உமர் )
சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டு கழகத்தின் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற “எப்.எஸ்.கே. மியண்டாட் பிரீமியர் லீக்” கிரிக்கட் மென் பந்து சுற்றுப்போட்டியின் வெற்றி கிண்ணத்தை பொலி லயன்ஸ் அணி தனதாக்கி கொண்டது.
மியண்டாட் விளையாட்டு கழகத்தின் வீரர்களை ஒன்றினைத்து மருதூர் வாரியர்ஸ்,மாளிகா யுனைடெட், சாந்தம் சலஞ்சர்ஸ், பொலி லயன்ஸ் ஆகிய நான்கு அணிகளாய் பிரிக்கப்பட்டு இவ் சுற்று தொடர் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டிகள் யாவும் சாய்ந்தமருது ஹிஜ்ரா மஸ்ஜித் சதுக்க மைதானத்தில் கடந்த (வெள்ளி-19, சனிக்கிழமை -20) இரு தினங்களாக சுற்று தொடரின் தலைவர் எஸ்.எம். அமீர் தலைமையில் இடம்பெற்றது.
இவ் சுற்று தொடரின் இறுதி போட்டிக்கு மாளிகா யுனைடெட், பொலி லயன்ஸ் அணிகள் மோதின
10 ஓவர் கொண்ட இவ் போட்டியானது நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மாளிகா யுனைடெட் அணியினர் முதலில் துடுப்பை தெரிவு செய்தனர்.
முதலில் துடுப்பாடிய மாளிகா யுனைடெட் அணியினர் 10 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.மேலும் இவ் அணியில் சிறப்பாக துடுப்பாடிய நஜீம் தனது அணிக்காக அதிகூடிய ஓட்டமாக 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
126 என்ற ஒட்ட இலக்கை நோக்கி வெற்றி இலக்கை பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபொலி லயன்ஸ் அணியினர் 9ஓவர் முடிவில் 03 பந்துகள் மிதமிருக்க 128 ஓட்டங்களை பெற்று 04 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று எப்.எஸ்.கே மியண்டாட் பிரீமியர் லீக் சுற்றியின் கிண்ணத்தை கைப்பற்றி கொண்டது .
போட்டியின் ஆட்டநாயகனாக பொலி லயன்ஸ் அணியின் வீரர் ஏ.எல்.பசால் தெரிவானார். இவர் 19 பந்துகளுக்கு 40 ஒட்டத்தினை பெற்றிருந்தார்.
இதேவேளை இவ் மென்பந்து சுற்று தொரில் சிறப்பாக விளையாடிய அணிகளின் வீரர்களுக்கு கிண்ணங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது .
தொடர் ஆட்டநாயகனாகவும் அதி கூடிய விக்கெட் வீழ்த்தவராக மாளிகா யுனைடெட் எம்.ஏ.எம். ரிஸ்னி அவர்களும்மற்றும் தொடரின் அதி கூடிய ஓட்டம் பெற்றவராக ஏ.எச்.எம். முர்ஷித் தெரிவானதுடன் இவர்களுக்கு கிண்ணங்கள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுற்று போட்டியின்பிரதம அனுசரனையாளர் எம்.ஜெ.எம். காலித் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக மை கோலா நிறுவனத்தின் வியாபார அபிவிருத்தி முகாமையாளர் வி. வசந்த குமார் மற்றும் மேற்பார்வை உத்தியோகத்தகர்.ஏம்.வை .ஏ அரபாத் , சிலோன் மீடியா போர்த்தின் தலைவர் ஊடகவியலாளர் ரியாத்.ஏ.மஜீத் அவர்களும்,மியாண்டட் கழகத்தின் தலைவர் ஏ.பாயிஸ் மற்றும்கழகத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை