மூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான சாத்தியம் குறைவு
மூக்குக் கண்ணாடி அணியாதவர்களை காட்டிலும் மூக்குக் கண்ணாடி அணியும் நபர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான சாத்தியம் 3 மடங்கு குறைவாக காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள ஆய்வுக் குழுவொன்றினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெவித்துள்ளன.
இதன்போது, 304 நபர்களை ஈடுபடுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மூக்கு கண்ணாடி அணிபவர்கள் குறைந்தளவில் தத்தமது முகத்தினை தொடுவதன் காரணமாக அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுவதற்காக சாத்தியம் குறைவாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு மனிதனும் சராசரியாக மணித்தியாலம் ஒன்றுக்கு 23 தடவைகளை தமது முகத்தை தொடுவதாகவும், அதில் சராசரியாக மூன்று தடவைகள் கண்களை தொடுகின்றனர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தொடர்ச்சியாக மூக்குக் கண்ணாடி அணிபவர்கள் தொடர்ந்தும் முகம் மற்றும் கண்களை தொடவதை தவிர்ப்பதன் காரணமாக அவர்களிடத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் சாத்தியம் குறைவாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை