வைரலாகும் அஜித்தின் சைக்கள் புகைப்படங்கள்!
அஜித் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தை கொடுத்துள்ளது.
இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்டுவரும் நிலையில் அஜித் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தை கொடுத்துள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி வரும் படம் வலிமை. இதற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் கடந்த ஒரு ஆண்டாக தொல்லை கொடுத்து வந்த நிலையில் அப்டேட் கேட்டு மற்ற பிரபலங்களை தொல்லை செய்ய வேண்டாம் என ரசிகர்களுக்கு அஜித் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இதனால் ரசிகர்கள் அமைதியான நிலையில் ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாகவும், விரைவில் அப்டேட்கள் வரும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஷூட்டிங் முடிந்ததால் ஓய்வுக்காக கொல்கத்தா சென்றுள்ளார் அஜித்குமார். முன்னதாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பைக்கில் பயணம் செய்த நிலையில் தற்போது கொல்கத்தாவில் மாஸ்க் அணிந்தபடி சைக்கிளில் வலம் வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கருத்துக்களேதுமில்லை