90 இன் கிட்ஸ்களுக்காய் திரைப்படம்!

சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் P. காசிமாயன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வீராங்கன்.K இயக்கியுள்ள திரைப்படம் கணேசாபுரம். இத்திரைப்படத்தில் நாயகனாக புதுமுகம் சின்னாவும் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த ரிஷா ஹரிதாஸ் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சரவண சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ராஜசிம்மன், கயல் பெரேரா, ஹலோ கந்தசாமி மற்றும் டிக்- டாக் ராஜ்பிரியன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது…
மதுரை மண்ணின் மையமாகக்கொண்ட இத்திரைப்படம் 90’s காலகட்டத்தில் நடைபெறுவதைப் போல் பயணிக்கிறது. இத்திரைப்படத்தில் வீரம், காதல், நட்பு என்று ஒரு ஜனரஞ்சகமான
கதைக்களத்தை மையமாக வைத்து எடுத்துள்ளோம்.
இதில் நாயகன் சின்னா மற்றும் நாயகி ரிஷா ஹரிதாஸ் புதுமுகங்களை போலல்லாமல் தங்கள் கதாபாத்திரத்தை உள்வாங்கி மிகவும் எதார்த்தமாக நடித்து உள்ளனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வாசு தனது கேமராவின் மூலம் ரசிகர்களை 90 காலகட்டத்திற்கு கொண்டு செல்வார் என நம்புகிறோம் அதேபோல் இசையமைப்பாளர் ராஜாசாயும் தனது இசையின் மூலம் இக்கதைக்கு உயிர் ஊட்டி உள்ளார் எனலாம். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.