மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சர அலங்கார வளைவு மீள அமைப்பு!

2021 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி தினம் எதிர்வரும் வியாழக்கிழமை, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக திருக்கேதீஸ்வர ஆலயத்தில், விசேட பூஜைகளுடன் இடம்பெறவுள்ளன.

ஆகவே நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக மன்னார் யாழ்.பிரதான வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தற்காலிக அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாக சபையினர் மற்றும் திருத்தொண்டர்கள் இணைந்து அலங்கார வளைவை அமைத்ததுடன், சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நுழைவு பகுதியில் சிரமதான பணிகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இம்முறை கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களின் பங்களிப்புடன், கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி திருகேதீஸ்வர சிவராத்திரி நிகழ்வுகள் மற்றும் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.