நாடளாவிய ரீதியில் ;தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றிய தெளிவுபடுத்தும் திட்டம்

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றி தெளிவூட்டும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நுகர்வோர் சேவை அதிகார சபையும், வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

அமைச்சர் காமினி லொக்குகே மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவின் தலைமையில் இதன் ஆரம்ப நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் இன்று (15) காலை நடைபெறவுள்ளது.

வாகன விபத்துக்களில் அதிகமாக பாதிக்கப்படுவோர் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் மற்றும் தலைக்கவசம் அணிதலின் முக்கியத்தும் பற்றி இந்த வேலைத்திட்டத்தின் போது தெளிவுபடுத்தப்படவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.