சுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்பதற்கு புதிய முயற்சி!
உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் வழித்தடமான, சுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள, பாரிய கொள்கலன் கப்பலான எவர் கிவன் கப்பலை மீட்பதற்காக புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
14 ட்ரக் இயந்திரங்கள் நேற்று இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக சுயெஸ் கால்வாய் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்றைய தினம், மேலும் ஒரு ட்ரக் இயந்திரத்தைப் பயன்படுத்தி, கப்பலை மீட்க முயற்சிப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எவர் கிவன் கப்பல் சிக்கியுள்ளமையால், சுயெஸ் கால்வாயின் இரு பக்கங்களிலும், சுமார் 300 கப்பல்கள் நீண்ட வரிசையில் சிக்கியிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்களேதுமில்லை