வவுனியா மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்
கிறிஸ்தவ மக்களின் ஈஸ்டர் பெரு நாளை முன்னிட்டு வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் இன்று (04) காலை விசேட பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன.
ஜேசுக்கிறிஸ்த்து உயிர்த்ததை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர்.இதனை முன்னிட்டு வவுனியா மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்றன.
வவுனியா மாவட்டத்தின புனித ஈஸ்டர் பெருவிழா பிரதான வழிபாட்டு நிகழ்வுகள் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்றது. இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றதுடன் இந்த வழிபாடுகளில் வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் உயிர்த்ஞாயிறு தற்கொலை தாக்குதல் காரணமாக வவுனியாவிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் இரானுவ , பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை