கல்முனையன்ஸ் போரமினால் அம்பாறை மாவட்டத்தில் 8.6 தொன் பேரீச்சம்பழம் விநியோகம்

(எம்.என்.எம்.அப்ராஸ் )

அம்பாறை மாவட்ட மக்களுக்கு இஸ்லாமியரின் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ பொதி வழங்கும் செயற்றிட்டம் கல்முனையன்ஸ் போரமினால் இரண்டாவது வருடமாகவும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு கல்முனை இக்பால் சனசமூக நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (20)
இடம்பெற்றது .

கல்முனையன்ஸ் போரத்தின் செயற்பாட்டாளர் முபாரிஸ் எம். ஹனீபா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத்அலி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இச் செயற்றிட்டத்தைஅங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

கல்முனையன்ஸ் போரமானது விடுத்த வேண்டுகோளுக்கமைய 8600 கிலோகிராம் பேரிச்சம்பழ தொகுதியினை பெஸ்ட் புட் மார்க்கெடிங் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தினர் நன்கொடையாக வழங்கியிருந்தனர்.

குறித்த பேரீச்சம்பழமானது அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் அமைப்புக்களூடாக இணங்கானப்பட்ட பயனாளிக் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படவிருக்கின்றன.

நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட அம்பாறை மாவட்ட பிரதேசங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் கல்முனையன்ஸ் போரத்தின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை கல்முனை பிராந்தியத்தில் பொது மக்களுக்கு பல்வேறு சமூக நல உதவி வேலைத்திட்டத்திங்களை சிறப்பான முறையில் இவ் அமைப்பினர் முன்னெடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.