டுபாயில் அதிஷ்ட சீட்டிழுப்பில் 64 கோடி ரூபா வென்ற இலங்கையர்

டுபாயில் கடமையாற்றும் இலங்கையர் ஒருவர் Ahu Dhabi Big Ticket லொத்தர் சீட்டிழுப்பில், 12 மில்லியன் டிரான் பணப்பரிசை வென்றுள்ளார்.

36 வயதான மொஹமட் மிஷ்பக் என்ற இளைஞனே, இந்த பணப்பரிசை வெற்றிக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில்  செய்தி வெளிவந்துள்ளது

இலங்கை பெறுமதியில் 64 கோடி ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணப்பரிசு வெற்றிக்கொண்டமை குறித்து Gulf News சேவைக்கு, மொஹமட் மிஷ்பக் கருத்து தெரிவித்துள்ளார்.

தன்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என அவர் கூறியுள்ளார்.
20 நண்பர்கள் இணைந்து கொள்வனவு செய்த லொத்தரிலேயே இந்த பரிசு கிடைத்துள்ளதாகவும் இந்த பரிசை பகிர்ந்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி தனக்கு 600000 டிராம் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுமுறைக்காக மொஹமட் மிஷ்பக் தற்போது இலங்கைககு வருகைத் தந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.