இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பயணிகள் வர தடை!
இந்தியாவிலிருந்து பயணிகள் இலங்கைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்தியாவில் இருந்து விமானம் மூலம் பயணிகளை ஏற்றிவருவதை, தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள COVID – 19 நிலைமை மற்றும் உள்நாட்டு சுகாதாரப் பிரிவின் பரிந்துரைகளுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பீ.ஏ. ஜயகாந்த குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை