நோன்பு பெருநாள் தொழுகையினை நடத்துவதற்கு அனுமதியில்லை – வக்பு சபை

நாட்டிலுள்ள எந்தவொரு பள்ளிவாசலிலும் புனித நோன்பு பெருநாள் தொழுகையினை நடத்துவதற்கு அனுமதியில்லை என வக்பு சபை இன்று (10) திங்கட்கிழமை அறிவித்தது.

கொவிட் – 19 பரலின் அடிப்படையில் சமயத் தளங்களில் கூட்டு செயற்பாடுகளுக்கு சுகாதார துறையினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய பெருநாள் தினத்தன்று அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட வேண்டும் என முஸ்லிம் சமய விவகார திணைக்களம் மற்றும் வக்பு சபை ஆகியவற்றின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் தெரிவித்தார்.

அத்துடன் பெருநாள் தினத்தன்று வீடுகளிலேயே தொழுது கொள்ளுமாறு முஸ்லிம்களிடம் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.