மட்டக்களப்பில் ஊடகவியலாளர் உட்பட இருவருக்கு கொரோனா
மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவருக்கும் வியாபாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர்.பரிசோதனைகள், பொதுச்சுகாதார பிரிவினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு பிரதான சந்தைத் தொகுதியில் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள், சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது வியாபாரிகள், பொதுமக்கள், ஊடகவியலார்கள் உள்ளிட்ட 60 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஊடகவியலாளர் ஒருவருக்கும் வியாபாரி ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை