விமான நிலையங்கள் நாளை முதல் திறக்கப்படும் !

நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் நாளை (ஜூன் 01) முதல் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்படும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவைகள் அமைச்சர் D.V.சானக இதைதெரிவித்தார்.

அந்த வகையில் ஒரு விமானத்தில் வரக்கூடிய அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை 75ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை விமான நிலையங்கள் தொடர்ந்து மூடப்படுமா? அல்லது திறக்கப்பட உள்ளதா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரனதுங்க முன்னதாக தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.